Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. திடீரென கேட்ட சத்தம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆரோட்டுபாறை பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பொது மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. அதன் பின் அந்த காட்டுயானை சதாசிவம் என்ற கூலித் தொழிலாளியின் வீட்டு சமையலறையை உடைத்து சேதப்படுத்தியதோடு அங்கிருந்த பருப்பு மற்றும் அரிசி போன்ற உணவு பொருட்களை தின்றுள்ளது.

இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சதாசிவத்தின் குடும்பத்தினர் சமையலறைக்கு சென்று பார்த்த போது காட்டு யானை நிற்ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காட்டு யானையை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |