யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த தோட்டத்தை ஆய்வு செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அந்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.