Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழிமறித்து விரட்டிய காட்டு யானை… அலறியடித்து ஓடிய இளம்பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஸ்கூட்டரில் வந்த பெண்ணை வழிமறித்த யானை ஸ்கூட்டரை தாக்கிய வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி ஊராட்சி அருகில் உள்ள வனப்பகுதியில் புலிகள், காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் இருக்கும் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஓன்று நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பயத்தில் அங்கேயே நின்று விட்டனர். இதனையடுத்து அந்த காட்டுயானை மெதுவாக சாலையை கடக்க முயற்சித்தபோது, ஊட்டியிலிருந்து மசினகுடி நோக்கி ஒரு கார் வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்த காட்டு யானை காரை நோக்கி வந்துள்ள நிலையில், அந்த காருக்கு பின்னால் ஸ்கூட்டரில் வந்த இளம் பெண்ணை காட்டு யானை திடீரென வழிமறித்து விரட்டி உள்ளது. இதனால் அச்சத்தில் அந்தப் பெண் சாலையில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வந்த வழியாக தப்பி ஓடி விட்டார்.

அதன்பின் சாலையில் கிடந்த மோட்டார் சைக்கிளை காட்டு யானை காலால் மிதித்து, துதிக்கையால் அதனை தூக்கி வீசிவிட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகளின் கூச்சல் சத்தம் கேட்டு யானை அங்கிருந்து ஓடிவிட்டது. இந்த அனைத்து காட்சிகளையும் அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கூடலூர், மசினகுடி மற்றும் முதுமலை போன்ற பகுதிகளில் இருக்கும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் வனவிலங்குகள் சாலையோரம் நின்று கொண்டிருந்தால் அதற்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் மட்டுமே அந்த விலங்குகள் பொதுமக்களை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

Categories

Tech |