யானையை தாக்கிய குற்றத்திற்காக பாகனை பணி இடைநீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகன் முருகன் என்பவர் சேரன் யானையை குளிப்பதற்காக மாயார் ஆற்றிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பாகனின் கட்டளைக்கு அடிபணியாததால் கோபமடைந்த முருகன் யானையை தாக்கியுள்ளார்.
இதனால் யானையின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன்பின் யானையை தாக்கிய குற்றத்திற்காக முருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணியிடை நீக்கம் செய்து புலிகள் காப்பக கள இயக்குனர் கௌஷல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.