Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை செதபடுத்திய யானை…. அலறி அடித்து ஓடிய பெண்…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தோட்ட தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகுனில்வயல் பகுதிக்குள் நுழைந்து  அங்கு பயிரிடப்பட்டுள்ள பாக்கு வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின் காட்டுயானை அப்பகுதியில் உள்ள மணியம்மா என்ற பெண் தோட்டத் தொழிலாளியின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணியம்மா தனது வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறி பக்கத்து வீட்டிற்குள் சென்றுவிட்டார். இவ்வாறு யானை விடிய விடிய அப்பகுதியில் சுற்றித்திரிந்து அதிகாலை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் பார்வையிட்டுள்ளனர். அப்போது சேதமடைந்த வீட்டை சீரமைக்க உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானை நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் கவனமாக வெளியே சென்று வர வேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |