Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“லாரியில் ஏற மறுத்தது” மதம் பிடித்த கும்கி யானை… மரத்தை முட்டி தள்ளியதால் பரபரப்பு…!!

மதம் பிடித்த கும்கி யானை லாரியில் ஏற மறுத்து மரத்தை முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்நிலையில் முதுமலையில் இருந்து வில்சன், உதயன், ஜான் என்ற 3 கும்கி யானைகள் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளன. இந்நிலையில் வில்சன் என்ற கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அதனை வனத்துறையினர் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். இந்த யானை அருகில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததோடு, அங்குள்ள தேயிலை செடிகளை நாசப்படுத்தி உள்ளது.

எனவே வனத்துறையினர், புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார், மற்றும் பாகங்கள் ஒன்றிணைந்து மதம் பிடித்த அந்த கும்கி யானையை முதுமலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கும்கி யானை லாரியில் ஏற மறுத்து அங்கிருந்த மரத்தை முட்டி தள்ளி உள்ளது. அதன் பின்னர் கும்கி யானைக்கு கரும்பு துண்டுகளை வழங்கி நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு கும்கி யானை உதயனுக்கு மதம் பிடிக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் அதையும் முதுமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |