Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நாங்க குழந்தை போல பாத்துக்குவோம்” சரமாரியாக தாக்கப்பட்ட யானை… நடுங்க வைக்கும் சத்தம்… வைரலாகும் வீடியோ…!!

பாகன்கள் கோவில் யானையை சரமாரி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவும் பங்கேற்றது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கிய வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் பாகங்கள் யானையை சங்கிலியால் கட்டிப் போட்டு அதன் பின்னங்கால்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் அடித்த அடியால் வலி தாங்க முடியாமல் யானை பிளிறிய சத்தம் வீடியோவில் பதிவாகி கேட்போரை நடுங்க வைத்தது. இந்நிலையில் அவர்களின் செயல் குறித்து கேட்டபோது, பாகங்கள் யானைகளை தங்கள் குழந்தை போன்று வளர்ப்பதாகவும் சொல் பேச்சை கேட்காத காரணத்தினால் இவ்வாறு அடிக்க நேர்ந்தது எனவும் கூறியுள்ளனர். ஆனாலும் இவ்வாறு யானைகளை தாக்குவது மிகவும் கொடூரமான செயல் என பல பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |