காட்டு யானைகள் சாலையை வழிமறித்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு உணவு தேடி வரும் இந்த காட்டு யானைகள் சில சமயம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் ஐயன் கொள்கையிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையை காட்டு யானைகள் வழி மறித்ததால் அங்கு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் வாகன ஓட்டிகள் நகராமல் அந்தந்த இடங்களில் நின்று கொண்டு வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டி அடித்த பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.