கல்லாறு பழப்பண்ணையில் காட்டு யானைகள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்து விட்டன.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் இருக்கும் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள மலையடிவாரத்தில் 8.92 எக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் பல்வேறு வகையான அலங்கார செடிகள், வாசனை திரவியங்கள் மற்றும் பழ மரங்கள் உள்ளன. இந்நிலையில் மலையடிவாரத்திலுள்ள இந்த பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள வாழை செடிகளை காட்டுயானைகள் நாசம் செய்கின்றன. இந்த பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகள் 100க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துவிட்டது.
மேலும் யானைகள் அங்குள்ள மரங்களில் தொங்கிய பலா பழங்களை பறித்து சாப்பிட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இப்பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்கும் பொருட்டு சோலார் மின்வேலி அமைக்கப்பட்ட போதிலும் காட்டு யானைகள் உள்ளே வந்துவிடுகின்றன. எனவே பண்ணைக்குள் காட்டு யானைகளை வருவதை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.