Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் சிதறிய பொருட்கள்… சேதமடைந்த சனி பகவான் கோவில்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து சனி பகவானின் கோவிலை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள சனிபகவான் கோவிலை முற்றுகையிட்டது. அதன்பின் காட்டு யானைகள் கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த மரச்சாமான்கள் மற்றும் பூஜைப் பொருட்களை போன்றவற்றை எடுத்து வீசியுள்ளன.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கோயிலுக்குள் அட்டகாசம் செய்து கொண்டிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர்.

Categories

Tech |