Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் சரிந்த யானை…! ஓடி வந்து பார்த்த பொதுமக்களுக்கு ஷாக்…! போலீஸ் தீவிர விசாரணை …!!

உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து இந்த இரண்டு யானைகளும் துரைக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்து அங்குள்ள நெற்பயிர்களை தின்றது.

அதற்குப்பின் 22 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தோட்டத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்து விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி,  நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த யானை பிளிறிய போது, மற்றொரு யானை வேறு வழியாக தோட்டத்தை விட்டு வெளியேறியது. இதனைத்தொடர்ந்து யானையின் பிளிறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த ஆண் யானையை காப்பாற்ற முயற்சி செய்தும், அந்த  யானை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் விவசாயிகள் எப்போதும் அவரவர் தோட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு சிறிய அளவில் பாயும் மின்சாரத்தை வெளிப்படுத்தும் பேட்டரி அல்லது சூரிய ஒளியில் இருந்து எடுக்கப்படும் ஷாக் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் உயிரிழந்த ஆண் யானையின் மீது உயர் மின்னழுத்தம் பாய்ந்து உள்ளது.  எனவே உயர் மின்னழுத்தத்தை,  துரை தனது தோட்டத்தில் பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |