ஜிஷுவாங்பன்னாவில் ஒரு யானை கூட்டம் கடந்த ஒரு வருடமாக ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி திரிந்து விட்டு தற்போது தான் சொந்த இடத்திற்கு திரும்ப தொடங்கியுள்ளது.
சீன நாட்டின், ஜிஷுவாங்பன்னா என்ற மிகப்பெரிய விலங்கு காப்பகத்தில் சுமார் 300 யானைகள் இருக்கிறது. இவை ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவை. இதில் 14 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், காப்புக்காட்டை விட்டு வெளியேறியது. எனவே, பல பத்திரிகைகளில் கடந்த ஒரு வருடமாக தலைப்பு செய்தியாக அறிவிக்கப்பட்டது.
ஏறக்குறைய, 500 கிலோ மீட்டர் தொலைவு இந்த யானைகள் சுற்றியிருக்கிறது. இந்த யானைகளை மீட்டு கொண்டுவர வனத்துறையினரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. எனினும் யானைகள் செல்லும் வழி பாதைகளை ட்ரோன் வைத்து கண்காணித்து வந்துள்ளனர். தற்போது இந்த யானைகளுக்கு, அவர்கள் சொந்த இடம் ஞாபகம் வந்திருக்கிறது.
எனவே, இப்போது தான் மீண்டும் ஜிஷுவாங்பன்னாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக இந்த யானைகளை கவனிப்பதற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது வேலை, யானைகள் செல்லக்கூடிய இடத்தை முன்கூட்டியே கண்காணித்து, மக்களுக்கு தெரியப்படுத்துவது தான்.
அதன்படி, கடந்த ஒரு வருடத்தில், 1,50,000 மக்கள் பல கிராமங்களில், தங்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். யானைகள் அங்கிருந்து சென்ற பின்பு, மீண்டும் மக்கள் அவர்களின் சொந்த வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் கோடிக்கணக்கான பணத்தை இழந்ததாக வனத்துறை கூறியிருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் இந்த யானைகளின் கூட்டமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.