Categories
உலக செய்திகள் வைரல்

பயந்து போன தாய்… துணிச்சலாக விரட்டிய எருமை கன்று… பின் வாங்கும் பெரிய யானை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெரிய யானையை ஒரு எருமை கன்று பயமில்லாமல் விரட்டியடிக்கும் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆம், இணையதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய யானையை பார்த்து தாய் எருமை பயந்து போய் பின்னால் நிற்கிறது.

Image result for Elephant has no clue what to do when it gets charged by a baby water buffalo

ஆனால் எருமையின் கன்று பயமில்லாமல் துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டிக்கொண்டே செல்ல யானையும் பின் வாங்கி கொண்டே ஓடுகிறது. யானையை விரட்டும் போது தாய் எருமையும் கன்று பின்னால் செல்கிறது. இதையடுத்து கன்று குட்டியை அழைத்து கொண்டு தாய் அங்கிருந்து சென்று விட்டது. இந்த காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Image result for Elephant has no clue what to do when it gets charged by a baby water buffalo

இந்த வீடியோ எந்த நாட்டில் எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. ஆனாலும் சமூகவலைதளத்தில் அந்த வீடியோ வேகமாக  பரவி வருகிறது. யானையை கண்டு துளியும் பயப்படாமல் அதை தைரியமாக விரட்டியடித்த அந்த எருமை கன்றை பலரும் புகழ்ந்து தள்ளி கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/NaturelsLit/status/1235219121215655936

Categories

Tech |