Categories
மாநில செய்திகள்

யானை உள்ளிட்ட விலங்குகளுக்கும்… கொரோனா பரிசோதனை…!!!

தமிழகத்தில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வந்ததையடுத்து நாளைமுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியளித்தது. இதையடுத்து தமிழகத்தில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்கள் மற்றும் முகாம்களில் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்படும். வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |