Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யானை கொல்லப்பட்ட விவகாரம் – அறிக்கை கேட்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் …!!

கேரளாவில் பெண்யானை உயிரிழந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது.

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிவைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளியே வந்ததன் அடிப்படையில் சென்னையில் இருக்கின்ற தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கை வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றது. குறிப்பாக கேரள வனத்துறை மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள  பசுமை தீர்ப்பாயம் ஜூலை 10 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனிதர்கள் மற்றும் விலங்குகள் மோதுவதை தடுப்பதற்கு ஆய்வு செய்வதற்கு குழுவை அமைத்துளது . கேரள வனத்துறை  தலைமை காவலர் தலைமையில் செயல்படும் அந்தக்குழுவில் தென்மண்டல கட்டுப்பாட்டு அதிகாரி உறுப்பினராக இருப்பார்.  அமைதி பள்ளத்தாக்கு வனக்காப்பாளர,  மன்னார்காடு மண்டல அதிகாரியும் உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கு நீண்டகாலத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,  யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் புலன்விசாரணை என்ன மாதிரியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ? கைது  நடவடிக்கை எப்படி இருக்கின்றது ? தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் தெரிவித்து ஜூலை 10 ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்து.

Categories

Tech |