சீனாவிலிருக்கும் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து சுமார் 15 காட்டு யானைகள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் வனப் பகுதிக்கு அருகே யோனன் என்ற மகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்திலிருக்கும் ஹூன்னிங் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து திடீரென்று சுமார் 15-திற்கும் மேலான காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வீடுகளிலும், சாலைகளிலும் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் கடைகளில் கிடைக்கும் பழங்களையும் உட்கொள்கிறது.
இந்நிலையில் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் காட்டு யானைகள் வழக்கமாக செல்லும் வனப்பகுதிக்கு பதிலாக எதிர்திசையில் சுமார் 300 மைல்கள் பயணம் மேற்கொண்டு மக்கள் இருக்கும் நகரத்திற்குள் வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை விரட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகளும், வனத்துறையினர்களும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் பொதுமக்களை கவனமாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.