Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எச்சரிக்கையாக இருங்கள்”- யானைகள் நடமாட்டம் அதிகம்…! அரை மணி நேரம் தவித்த மக்கள்…!

வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறின. இராமர் அணை அருகே உள்ள ரோட்டில் யானைகள் கூட்டமாக நிற்பதைத் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணித்தவர்கள் கண்டனர்.

உடனே ஓட்டுனர் பேருந்தை இயக்காமல் அவ்விடத்திலேயே நின்றார். மேலும் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், சரக்கு வாகனம், கார் போன்ற வாகனங்களில் வந்தவர்கள் யானைகளை பார்த்ததும் பயந்து அங்கேயே நின்றனர். அச்சாலையில் சுமார் அரை மணிநேரம் நின்ற யானைகள் பின் தானாகவே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றன. இதனை அறிந்த வனத்துறையினர் மக்களிடம் தலைமலை வனப்பகுதி சாலையில் அதிகமான வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |