Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்னும் அனுமதிக்கவில்லை…. பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் யானைகள்…. ஆவலுடன் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்….!!

முதுமலையில் யானை சவாரி தொடங்குவதற்காக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததால் திறக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளை வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் அனுமதித்தல் போன்ற சுற்றுலாத் துறை சார்ந்த பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டது. ஆனால் யானை சவாரி மட்டும் இன்னும் தொடங்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டதையடுத்து பல மாதங்களாக மூடிக்கிடந்த விடுதிகளை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் எந்த நேரத்திலும் யானை சவாரிக்கு அனுமதி அளிக்கப்படும் என்பதால் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளின் மீது வனத்துறையினர் அமர்ந்து ரோந்து செல்வது குறித்த பயிற்சியை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, சுற்றுலாப் பயணிகள் சவாரிக்காக வளர்ப்பு யானைகள் பயன்படுத்தபட்டன. ஆனால் ஊரடங்கு காலத்தில் சவாரி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதால் ரோந்து பணிக்கு மட்டுமே வளர்ப்பு யானைகள் பயன்படுத்தபட்டன. ஆனால்  பல மாதங்களாக சவாரி நடக்காததால் தற்போது யானைகளுக்கு சவாரி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்போது அனைத்து யானைகளும் தயார் நிலையில் உள்ளதால் உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்த உடனே யானை சவாரியும் உடனடியாக தொடங்கப்படும் என வனத்துறையினர் கூறினர்.

Categories

Tech |