Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்கு பார்த்தாலும் பசுமை…. குட்டியுடன் உலா வரும் யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர்-கோவை சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த சாலையில் காட்டு யானைகள் தனது குட்டியுடன் அங்குமிங்கும் வந்துள்ளது. மேலும் இந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களின் கிளைகளை ஒடித்து நின்று கொண்டிருந்ததால் அந்த சாலை வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது மழை பெய்து அனைத்துப் பகுதிகளும் பசுமையாக காணப்படுவதால் காட்டுயானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. எனவே அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |