விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் விவசாயி வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து எட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதுவரை இவரது தோட்டத்தில் மட்டும் 55 தென்னை மரங்கள் சேதமானது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பயிடப்பட்டுள்ளது. இது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் காட்டு பன்றிகள் நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது “தங்க நகைகளை அடமானம் வைத்து நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இவ்வாறு பயிர்களை சேதபடுத்தியது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதற்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மலைப்பகுதிகளில் இருந்து விவசாய நிலத்திற்குள் காட்டு பன்றிகள், யானைகள் போன்றவை வராமல் இருப்பதற்காக மலையை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் எனவும் மலையை சுற்றி அகழியை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.