தாய்லாந்து நாட்டில் சாலையை மறித்து வயதான யானை தனது மகனுக்கு வாகனத்தில் இருந்த உணவுப் பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும் என பறித்துச் சாப்பிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் சச்சோயங்சாவோ (Chachoengsao) என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். அப்போது ஒரு சிறிய டிரக் வண்டியில் உணவுப் பொருள் இருப்பதை ஒரு யானை பார்த்து விட்டது. உடனே வண்டியில் இருந்த உணவு பொருட்களான கரும்பை சாப்பிட தொடங்கியது. பின்னர் வண்டியின் முன்புறமாக மறித்து நின்றபடி, வண்டியின் பின்னால் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை தும்பிக்கையால் எடுத்து சாப்பிடத் தொடங்கியது. இதனால் வண்டியில் வந்தவர்கள் பயந்து போய்விட்டனர். சிறிது நேரம் கழித்து வண்டியை மெதுவாக நகர்த்தினர்.
இறுதியில் அந்த யானை காய்கறிகள் வைக்கப்பட்ட மூட்டையை எடுத்து சாலையில் தூக்கி போட்டு விட்டது. அப்போது யானை சற்று தூரம் நின்றதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த இடைப்பட்ட சில வினாடி நேரத்தில் டிரக்கில் வந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என வேகமாக சாலையில் கிடந்த மூட்டையை எடுக்காமல் அங்கிருந்து தலைதெறிக்க காரை இயக்கி ஓட்டம் பிடித்தனர்.
வந்த இரண்டு யானைகளில் வழிமறித்த வயதான ஆண் யானை இளம் யானைக்கு எப்படி வண்டியை வழிமறித்து சாப்பிட வேண்டும் என சொல்லிகொடுத்துள்ளது. அனேகமாக இளம் யானை மகனாக இருக்கலாம் அல்லது யானைக்கூட்டத்தில் உள்ள மற்றொரு இளம் பெண் யானையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் 3000 முதல் 4000 யானைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.