Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் கண்காணிப்பு… வலியை பொறுத்துக் கொண்டு பயணித்த யானை… மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

புத்துணர்வு முகாமில் கலந்துகொண்ட நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவ குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8ஆம் தேதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் துவங்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறுவதால், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு கோவில்களை சேர்ந்த 26 யானைகள் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளன. இவ்வாறாக முகாமில் கலந்து கொள்ளும் யானைகளை கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் திருக்குமரன் தலைமையில் 24 மணி நேரமும் மருத்துவ குழு மூலம் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் நெல்லை திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடிவள்ளி இந்த முகாமில் பங்கேற்பதற்காக கடந்த 6ஆம் தேதி அழைத்து வரப்பட்டுள்ளது. அப்போது நீண்ட நேரமாக நின்றுகொண்டு பயணம் செய்த யானை லாரியில் அமர முயற்சி செய்தபோது கட்டையில் கயிறு கட்டப்பட்டு இருந்ததால் யானையால் நகர முடியவில்லை. இதனால் அந்த கட்டை மீது உரசியவாறே நீண்ட தூரம் யானை பயணம் செய்ததால், அதன் இரண்டு பின்னங்கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த காயமானது இன்னும் சில நாட்களில் குணமாகி விடும் என்றும், காயம் ஏற்பட்டிருந்தாலும் மற்ற யானைகளை பார்த்த மகிழ்ச்சியில் குறுங்குடிவள்ளி யானை உற்சாகமாக உள்ளது என மருத்துவ குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |