கொலை செய்ய வந்தவர்களிடமிருந்து, தன் உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கு 5 கோடி ரூபாய் சொத்தை எழுதி வைத்த, ஒருவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்தர் இமாம். இவர் பிகாரில்அமைந்துள்ள ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வனவிலங்கு அறக்கட்டளையில் (AERAWAT) தலைமை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இமாமின், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்தர் இமாமும் தனது மையத்தில் உள்ள யானைகளை மிகுந்த அன்போடு பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது உயிரைக் காப்பாற்றிய யானைகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை யானைகளுக்கு எழுதி வைத்துள்ளார்.
ஒரு வேலை யானைகள் இறந்தால் பணம் ஏராவாட் (AERAWAT) அமைப்புக்குச் செல்லும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.