Categories
உலக செய்திகள்

யானைகள் அழிந்தால், உலகத்திற்கு ஆபத்து.. உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!!

யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள் அழிந்தால் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளரும் மரங்களை யானைகள் அதிகம் உண்ணும் என்றும், வேகமாக வளரும் மரங்களுக்கு கார்பன் டை ஆக்சைடை அதிக அளவு உட்கொள்ளும் என்றும் தெரிவித்தனர்.

Image result for elephants

மேலும்  யானைகள் அழிந்தால் இம்மரங்கள் அதிக அளவு வளர வாய்ப்பு இருப்பதாகவும், பகலில் உட்கொள்ளும் ஆக்ஸைடை விட இரவில் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் யானைகளின் அழிவு வளிமண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் உலகவெப்பமயமாதல் விரைவாக நடைபெறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |