சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே கொட்டப்பட்டு சென்றுவிடும். இதனை தின்பதற்காக காட்டுயானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வந்து முகாமிட்டு கொள்கின்றனர்.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நாள்தோறும் அச்சத்துடனேயே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். இவ்வாறிருக்கையில் ஒற்றை தந்தம் கொண்ட காட்டு யானை ஒன்று நீண்ட நேரம் அங்கே முகாமிட்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டி செல்லாமல் ஒரே இடத்தில் நின்றவாறு இருந்தன. இதையடுத்து கரும்புகளை தின்பதற்காக காட்டு யானைகள் சோதனைச்சாவடி அருகே வந்து முகாம் இடுகின்றனர். ஆகவே அதிகப்படியான கரும்புகளை ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.