வயல் நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென்காசி புளியங்குடி பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கலையரசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காடுவெட்டி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் அவர் நெல் பயிரிட்டு இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நெல் வயலுக்குள் புகுந்துள்ளது.
பின்னர் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. எனவே இப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.