பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர்.
மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் கட்டிடம் திடீரென்று எப்படி இடிந்து விழுந்தது மற்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.