ஒரு வருடத்திற்கும் மேல் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை ஊரடங்கு முடிந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்பந்தலில் வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவரின் வீடு ஒரு வருடமாக பூட்டியே கிடந்தது. தற்போது அந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று அதே பகுதியை சேர்ந்த பல வீடுகளுக்கு மின் கட்டணம் பல மடங்கு அதிகமாகி உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டாலும் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் நிலையில் பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வசூலிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது ஊர் அடங்கினால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தியதாலையே அரசு மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.