பிஜி நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 1 1 பேர் வரை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஜி நாட்டில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலி காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த மாதம் ஜனவரியிலிருந்து மொத்தம் 74 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்திற்கான நிரந்தர செயலாளர் ஜேம்ஸ்பாங் கூறுவதாவது, “கடந்த ஒன்றரை மாதங்களில் 11 பேர் வரை எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் அவர்களில் பலர் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்” என தெரிவித்துள்ளார். இந்த எலிக்காய்ச்சல் நோயானது பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
மேலும் இந்த பாக்டீரியா நோய் தோல், மூக்கு, கண், வாய் ஆகியவற்றின் வழியே உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குகிறது. மேலும் எலி காய்ச்சலானது வெள்ளநீர் போன்ற மாசடைந்த நீரால் தீவிரமாக பரவத் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து பசிபிக் தீவு நாடுகளில், கோடை காலங்களில் ஏற்படும் அதிக அளவிலான மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உயருகிறது.