தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குருவி மலை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி சேட்டு குடும்பத்தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேட்டு மகன் ராஜ்குமார் என்பவர் தந்தை மீது அதிகமாக பாசம் கொண்டவர். ஆனால் தந்தை திடீரென இறந்து விடுவார் என்று ராஜ்குமார் எதிர்பார்க்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ராஜ்குமார் எதுவும் சாப்பிடாமல் மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்குமார் தந்தை தற்கொலை செய்து கொண்ட அதே பாணியில் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் ராஜ்குமாரை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக ராஜ்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.