Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஒரு பாசப்போராட்டம்.. அதிசய நிகழ்வு.. வெளியான வீடியோ..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலில், தங்கள் குட்டியை காக்க போராடும் யானைகளின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருவது பலரும் அறிந்த செய்தி. அந்த சமயத்தில் வெளியில் துப்பாக்கி சத்தங்களும், குண்டு வெடிக்கும் சத்தங்களுடன், சைரன் ஒலி ஒலித்துக்கொண்டிருப்பதால், உயிரியல் பூங்காவில் பயந்துபோன பெண் யானைகள், தங்களின் குட்டியை காப்பதற்காக அதை சுற்றி சுற்றி வருகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆபத்து நிகழப்போகிறது என்று யானைகள் உணர்ந்தால், அனைத்து திசைகளிலும் ஒவ்வொரு யானை நின்றுகொண்டு தங்களின் குட்டிகளை நடுவில் வைத்து காப்பார்களாம். அதாவது எந்த திசையிலிருந்து ஆபத்து நெருங்கினாலும் தங்கள் குட்டிகளை தாக்கி விடக்கூடாது என்பதில் உஷாராக இருப்பார்களாம்.

அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் நின்றுகொள்வார்களாம். மேலும் ஒரு பெண் யானை தன் குட்டியை பிரசவிக்கும் சமயத்தில், அந்த யானையை சுற்றிக்கொண்டு அதற்கு பாதுகாப்பு கொடுக்கும் விதமாக பிற யானைகள் நிற்பார்களாம். மனிதர்கள் தான் மற்றவர்களை தாக்க வேண்டும் என்று வெறியோடு சுற்றுகிறார்கள். ஆனால் நாம் மிருகங்கள் என்று கூறும் இவர்களோ தங்கள் இனத்திற்கு ஆபத்து வராமல் காப்பாற்றுவதற்கு போராடுகிறார்கள்!

Categories

Tech |