பிரிட்டனில் 1952ஆம் ஆண்டிலிருந்து மிக நீண்ட காலமாக பிரிட்டனின் அரசியாக இருக்கிறார் எலிசபெத் ராணி. இந்த நிலையில் நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் எலிசபெத் ராணி தனது 96 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதற்கிடையில் இணையதளங்களில் இரண்டு குதிரை குட்டிகளுடன் எலிசபெத் ராணி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் ராணியின் பிறந்த நாளுக்கு வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்க் காவலர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்தும், பிரிட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு வீரர்கள் லண்டன் ஹைட் பூங்காவில் பீரங்கிகளை வெடித்தும் ராணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.