நடிகர் விஷ்ணு விஷால் அனைத்து நடிகர்களுக்கும் அதிரடி நாயகனாக நடிக்கத்தான் ஆசை இருக்கும் என கூறியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடி” குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருகிறார். “ராட்சசன்” படத்தின் நடித்து அதன்மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களின் ஒருவராக திகழ்கிறார். இவரின் மார்க்கெட் அந்தஸ்தையும் இப்படம் உயரச் செய்துள்ளது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் தற்போது வந்துள்ளது.
அடிதடி படம் ஒன்றில் நடிப்பதற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: “காரை விட்டு இறங்கியதும் தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள வேண்டும் என எல்லா கதாநாயகர்களும் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு அதிரடி கதாநாயகனாக வேண்டும் என விரும்புவார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் வர்த்தகம் தொடர்பான அடிதடி படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை வரும். அப்படி இல்லை என்று சொன்னால் அது சுத்தமான பொய்” என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.