திருச்சி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதால் கொரோனா கட்டுப்பாடு விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமி ல்லாமல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று சுகாதாரத்துறை சார்பில் ஆர். சி ஆதிமூலம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கண்காணிப்பாளர், அரசு நீதித்துறை சிறப்பு செயலாளர் ரிட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் யாழினி ஆகியோர் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். மேலும் அந்த முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் அவர்களின் உடல் நிலையைப் பற்றி அதிகாரிகள் கேட்டறிந்தனர்.