Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் கரெக்டா கொடுக்கிறார்களா… கலெக்டரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழக அரசு கொரோனா நிவாரண உதவித்தொகை 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுத்து அதன் படி பொருட்களை  வழங்கி  வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கணியனூர் பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் போது கலவை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் கிராம அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கலெக்டர் ரேஷன் கடை ஊழியர்களிடம் கொரோனா நிவாரண உதவித்தொகை 2,000 பணம் மற்றும் 14 பொருட்களும் பொதுமக்களுக்கு சரியாக வழங்கியுள்ளனரா என்று அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதன்பிறகு பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Categories

Tech |