Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லாம் ரெடியா இருக்கு… ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவிகள் இருப்பு… மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகள் போதிய அளவு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளைஅறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனையடுத்து அங்கு 377 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 114 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மீதி உள்ளவர்கள் அவர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள்   மற்றும் சிகிச்சையை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுர பகுதியில் கொரோனா பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நகராட்சி என்ஜினியர் நிலேஷ்வர், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் பொது சுகாதார அலுவலர்கள் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த ஆய்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனை என 21 மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இதில் 1,369 படுக்கை வசதிகளுடன் சிகிச்சைக்கான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வென்டிலேட்டர் கருவிகளும் அதிகமாக வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் மற்றும்  தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அதற்கான 27 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்கள் மீது ரூ. 33 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |