Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் தானம் பண்ணிருங்க… ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்ட இதயம்… சென்னையில் பரபரப்பு…!!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ததால் அவரின் இதயம் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது .

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூனவேலம்பட்டி புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சித்தேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மகுடேஸ்வரன் மற்றும் மாதேஷ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாதேஷ் என்பவர் அதே பகுதியில் இருக்கும் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாதேஷ் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் திடீரென இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியதால் மாதேஷ் படுகாயமடைந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷின் மூளை செயல் இழந்து விட்டதால் அவர் சுயநினைவு இல்லமால் உயிர் வாழ முடியாது என்று அவரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாதேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் மாதேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு தேவையான  நடவடிக்கைகள் எடுக்குமாறு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து மாதேஷின் உடலிலுள்ள  இதயம், கண், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட  உடல் உறுப்புகளை தனித்தனியாக அகற்றி பல்வேறு மருத்துவமனைகளுக்கு  ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் செந்தில் குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மாதேஷின் இதயத்தை சென்னைக்கு கொண்டு வந்தனர்.

Categories

Tech |