எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைய முயன்று வருகின்றனர். இதற்காக போலாந்து எல்லையில் மக்கள் குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதிலும் போலாந்து எல்லைகள் திறக்கப்படாததால் அங்குள்ள Kuznica கிராமம் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைய மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் மற்றொரு புறம் பெலாரஸ் எல்லையில் உள்ள முட்கம்பி வேலிகளை உடைத்த அகதிகளுடன் பாதுகாப்பு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கடும்பனி பொழிகிறது. இதனால் எட்டு அகதிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.