இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக்கில் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதட்டம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் இதுவரை 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று ஏழாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்வாவ்யோ ஜப்பானில் நடைபெற்ற குவாட் அமைப்பின் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையின் போது எல்லையில் படைகளை சீனா முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்த இந்திய தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.