அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அங்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் 48 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து 860 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 98 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி என 958 பேருக்கு தற்போது வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 67 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 48 பேருக்கு கோவேக்சின் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு தற்போது வரை கோவிஷீல்டு தடுப்பூசி 31 ஆயிரத்து 689 பேருக்கும் மற்றும் 1,587 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என 33 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 940 கோவிஷீல்டு தடுப்பூசியும் 1,010 கோவேக்சின் தடுப்பூசிகள் தற்போது இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.