Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

80 ஆண்டுகளுக்கு மேல்…. இப்படிதா இருக்கு…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை….!!

லெட்சுமாங்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழி பாதை அமைத்து தரக்கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள லெட்சுமாங்குடி கடைவீதி சாலை 80 ஆண்டுகளுக்கு மேலாக குறுகலான சாலையாகவே இருகின்றது. இந்த சாலையானது திருவாரூர் – மன்னார்குடி என்ற வழியில் இருக்கின்றது. இதன் வழியாக தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி- கல்லூரி வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற அலுவலகங்களுக்கும் இந்த கடைவீதி சாலையை கடந்து தான் சென்று வரவேண்டும். எனவே லெட்சுமாங்குடி கடைவீதி சாலை மிகவும் குறுகலாக இருப்பதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

அப்போது வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் போகும்போது வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக பல மணி நேரம் நின்று விடுகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பயணிகள், பொதுமக்கள் என பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர நோயாளிகளை ஏற்றிச் செல்லும் 108 ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து லெட்சுமாங்குடி கடைவீதி சாலை ஒரு வழிப்பாதையாக அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |