நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தக் கொரோனா தொற்று பரவலை தடுக்க உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளில் உள்ள மக்களும், தலைவர்களும் ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தற்போது நியூசிலாந்தில் பயன்பாட்டில் உள்ள பைசர் தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.