Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டல… துப்பாக்கிச் சூடும் நடத்தல… இந்தியா ராணுவம் விளக்கம் …!!

இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது.

லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள இந்திய ராணுவம் படைக்குறைப்பு மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |