Categories
உலக செய்திகள்

எல்லாருக்கும் இலவசம்…! ”கட்டணம் செலுத்த வேண்டாம்”…. அமீரகத்தில் சூப்பர் அறிவிப்பு …!!

சார்ஜாவில் அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி பொதுமக்கள் நூலகங்களில் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினராக ஆகலாம் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புத்தகங்களை ஒவ்வொரு நபரும் வாசித்து அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி காணொளி மூலமாக நடத்தப்படுகின்றது. இது குறித்து ஷார்ஜா  பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது,இந்த மாதத்தில் கட்டணமின்றி   நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன் ,வாசிப்பவர் என்று புதிய முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக நூலக உறுப்பினராக ஆகலாம். இந்த சலுகை ஒரு வருடத்திற்கு இருக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2022ல் அவர்கள் உறுப்பினருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் ,பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆன்லைனிலும் நூலகங்களை படிக்கலாம்.

அடுத்ததாக வாசிப்பவர்கள் தங்களின் நூல்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்களிடம் உள்ள நூல்களை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். இந்த வாசிப்பு மாதம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |