உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்ககூடிய ட்விட்டர் கணக்கை அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவன் நடத்தி வருகிறார்.
உலகப்பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரிலிருந்து பெர்லின் நகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
https://twitter.com/ElonJet/status/1505758798559936515
இந்த தகவல், இவரின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்க கூடியஎலான் ஜெட் என்ற ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக் ஸ்வீனி என்ற 19 வயது மாணவர் தான் இந்த ட்விட்டர் கணக்கை வைத்திருக்கிறார். எலான் மஸ்க் மேற்கொள்ளும் பயணங்களை கண்காணிக்கக் கூடிய இந்த ட்விட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.