Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கலையே!”…. எலான் மஸ்க் கூறியது என்ன தெரியுமா?…

ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார்.

இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, என்னுடைய கிரகத்திற்கு திரும்பி செல்ல முயல்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதில் பலரை கவர்ந்திருக்கிறது.

அதற்கு டிம் அர்பன், நீங்கள் இப்படி வெளிப்படையாக கூற மாட்டீர்கள் என்று நாங்கள் எல்லாரும் ஏற்கிறோம் என்று நினைத்தேன் என குறிப்பிட்டார். இதற்கு எலான் மஸ்க், “இதனை  உறுதிப்படுத்துவதா, இல்லை மறுத்துக்கூறுவதா? என்பது தெரியவில்லை. நான்  வேற்றுகிரகவாசி என்னும் சதிக் கோட்பாட்டை உறுதியானது என கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |