Categories
உலக செய்திகள்

ரூ.10 கோடியில் ககன்யான் திட்டம்… இஸ்ரோவுக்கு தனது வாழ்த்துக்கள்… எலான் மஸ்க் டுவிட்..!!

எலான் மஸ்க் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இஸ்ரோ ரூ.10 ஆயிரம் கோடி செலவில் “ககன்யான்” என்று பெயரிடப்பட்ட விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது 2022-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது ககன்யான் விண்கலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை அனுப்ப உள்ளது. இதற்கிடையே திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்திய கொடியுடன் ஒரு வார்த்தையில் “வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வருகின்ற 2026-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதனை தரையிறக்கும் முயற்சியில் உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |