எலான் மஸ்க்-யிடம் நீங்கள் வேலை செய்ய வேண்டுமா?. அப்படியென்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் போதுமானது. உலக அளவில் நடைபெறும் அனைத்து INTERVIEW-விலும் கேட்கப்படக்கூடிய கேள்விகளில் 81% மக்கள் பொய்யே சொல்லுகிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கையில் வெளிவந்திருக்கிறது. இதைப்பற்றி எலான் மஸ்க்-கிற்கும் தெரியும் என்று நினைக்கிறோம்.
அதனால்தான் எலான் மஸ்க் தனது நிறுவங்களில் பணிபுரிய விரும்புவோருக்கு ரொம்பவே சுலபமான ஒரு கேள்வியை தான் கேட்கிறாராம். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா.. “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் கடினமான பிரச்சனை எது? அதனை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டு தீர்வு கண்டீர்கள்?” என்பதே ஆகும். இந்தக் கேள்விக்கு சரியான விடையை சொன்னால் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள். இதற்காக நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொன்னாலே போதுமானது. அதுவும் தெளிவாக சொல்ல வேண்டுமாம்.