இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, எலான் மஸ்க்-ஐ சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, அமெரிக்க நாட்டின் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவரான எலான் மஸ்க்கை இந்த வாரத்தில் நேரில் சந்திப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்.
மின்சார வாகன பேட்டரி தயாரிக்க தேவைப்படும் நிக்கல் என்ற முதன்மை மூலப்பொருளின் உற்பத்தியில் உலக நாடுகளிலேயே இந்தோனேசியா தான் முதலிடம் வகிக்கிறது. எனவே, நிக்கல் உற்பத்தி செய்யப்படும் மையமான இந்தோனேசிய நாட்டின் சுலவாசி என்ற தீவிற்கு டெஸ்லா நிறுவனத்தினுடைய அதிகாரிகள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.