Categories
உலக செய்திகள்

எரிமலை வெடிப்பு எதிரொலி… மொத்தமாக முடங்கப்பட்ட இணையசேவை…. உதவ முன்வந்த பெரும் பணக்காரர்….!!!

டோங்கோ தீவு நாட்டிற்கு அருகில் வெடித்து சிதறிய எரிமலையால், முடக்கப்பட்ட இணையசேவை அளிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் இருக்கும் டோங்கோ என்ற சிறிய தீவு நாட்டிற்கு அருகில் சில தினங்களுக்கு முன் தண்ணீரின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சாம்பல் மற்றும் புகை மண்டலம் காணப்பட்டது. எரிமலை வெடிப்பால், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

மேலும், தீவுகள் சிலவற்றில் சுனாமி பாதிப்பு உண்டானது. எரிமலை வெடிப்பால் டோங்கோ தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை தெரியப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானது. எரிமலை வெடிப்பு உண்டான தீவு ஏறக்குறைய நீரில் மூழ்கி இருக்கிறது.

எனவே, அப்பகுதியில் தொலைத்தொடர்பு இணையச் சேவை முற்றிலுமாக முடங்கிவிட்டது. இந்நிலையில், உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், தனக்குரிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலமாக இணைய சேவை அளித்து உதவ முன்வந்திருக்கிறார். இதுபற்றி, எலான் மஸ்க், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஸ்டார்லிங் திட்டத்தின் மூலமாக இணைய சேவையை மீண்டும் அளிக்க வேண்டுமெனில் டோங்கா தீவின் மக்கள் தங்களிடம் கூறலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |